என் குருதியிலும் உன் பெயர்தானடி ஜித்தனாக 555

அடி பெண்ணே...

உடலை என்னோடு
வைத்து கொண்டு...

உயிரை உன்னோடு
அனுப்பினேன் வைத்தேன்...

உன் உயிர் நான்
இல்லையென சொன்னாயடி...

அன்று நீ உதிர்த்த
வார்த்தை...

தென்றலில் கலந்த
சுவாசமோ...

தென்றலில் கலந்த சுவாசமாய்
நீ நினைக்கிறாய்...

என் உயிரில் கலந்த சுவாசமாய்
நான் நினைக்கிறன்...

உயிரில்லா உடலில்
வலிகள் ஏதடி...

என் உள்ளங்கைகளை
ஆணிகள் தைத்த போதும்...

வலிகள் இல்லையடி...

வழிந்தோடிய என்
குருதியில் கூட...

உன் பெயரினை
எழுதி பார்த்தேனடி...

பைத்தியகாரனாக நான்...

கடவுள் நம்பிக்கை
உனக்கு இருந்தால்...

உன் மனதில்
நினைத்து கொள்...

உன் வாழ்வில் இனி
ஒருமுறையேனும்...

என்னை நீ சந்திக்க
கூடாதென்று...

எதார்த்தமாக கூட
என்னை நீ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Mar-14, 9:30 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 257

மேலே