இதுதான் வாழ்க்கை

எனக்கும் உன்னை பிடிக்கும்
உனக்கும் என்னை பிடிக்கும்
பிடிச்சிருக்கு என்று –நீ
சொன்னாய் –நான்
எனக்கும் தான் என்று –ஆனால்
என் சோகவும் சொன்னேன்........

கடந்துபோனது பொம்மை
வாழ்க்கை –அதை
மறந்துவிடு என்றாய்-நானும்
பொம்மையாய் தலையசத்தேன்.........

பொழுதுகள் எல்லாம் –எனக்கும்
உனக்கும் கைபேசியில் ஆகிப்போனது
பேசிப்பேசி அது காதலாய் –நமக்குள்
பூ பூத்தது.........

காதலில் நீ முதல் அடியெடுத்து
நடந்தாய் –நான்
நடக்கத்தொடங்கினேன்.........

காதல் வானில் –நீ
சிறகுவித்தாய் –நான்
காதலின் தத்துவம் கண்டுகொண்டேன்......

உன் கண்களில் அடிக்கடி –கண்ணீர்
அது கவலையின் உப்பு
கண்ணீர் இல்லை –ஆனந்தந்தின்
உச்ச கண்ணீர்..............ஆனந்த கண்ணீர்

இதுதான் வாழ்க்கை –என்று
நீ எனக்கு புரியவைத்தாய்-நான்
புரிந்துகொண்டேன் காதலை..........................!!!!

எழுதியவர் : கார்த்திக் . பெ (30-May-10, 10:02 pm)
Tanglish : ithuthaan vaazhkkai
பார்வை : 1427

மேலே