நீயும் என்னை நேசித்தாயா?

நீயும் என்னை நேசித்தாயா?

என்னைப் புரியும்
நிலையில் எப்போதும்
நீ இருந்ததில்லை
நீ என்னைப் பிரியும்
நிலைக்கு இதுவும்
ஓர் காரணம்
முன்கூட்டியே
எழுதப்பட்ட
உன் தீர்ப்பால்
விசாரணையின்றி
தண்டிக்கப்பட்டேன்
என்னை
விட்டு விலகி
வெகுதூரம்
சென்று விட்டாய்
பழகி விடும் உனக்கு
என் நினைவின்றியும் ஜீவிக்க
இப்போதேனும்
சொல்லி விட்டுப் போ
நீயும் என்னை நேசித்தாயா?

எழுதியவர் : கார்த்திக் . பெ (30-May-10, 10:29 pm)
பார்வை : 1554

மேலே