எங்கே தேடுவேன்
ஆறும் இல்லை
வழியும் இல்லை
வாய்க்கால் எங்கே வெட்டுவது..!!
***
காடும் இல்லை
மரமும் இல்லை
கனிகள் எங்கே வாங்குவது..!!
***
பசுவும் இல்லை
கன்றும் இல்லை
பாலை எப்படி பருகுவது..!!
***
விதையும் இல்லை
புழுவும் இல்லை
பயிரை எப்படி விளைவிப்பது..!!
***
உழவும் இல்லை
உழவனும் இல்லை
உணவுக்கு யாரை நாடுவது..!!
***
மேகம் இல்லை
மழையும் இல்லை
மண்ணில் எங்கே உயிர் வாழ்வது..!!