அப்பாவி அரசியல்வாதிகள்
யாசகன் போல்
பிச்சை கேட்கிறேன்
என்றார் ஒருவர்..
தீது ஒழிந்து
நன்மை நிகழ
என்றார் மற்றொருவர்..
சுட்டெரிக்கும் சூரியனை
வீழ்த்துவோம்
என்றார் ஒருவர்..
இரக்கமற்ற இலையை
பொசுக்குவோம்
என்றார் மற்றொருவர்..
தாமரையை
தாறுமாறாய் தகர்த்திடு
என்றார் ஒருவர்..
கையை
காணாமல் ஆக்குவோம்
என்றார் மற்றொருவர்..
காடு மேடு
எதுவானாலும் பேசுவேன்
என்றார் ஒருவர்..
காலமெல்லாம்
கட்சி வாழ்க
என்றார் மற்றொருவர்..
சரக்கடித்து
மட்டையானார்
ஒருவர்..
டீக்கடையில்
தஞ்சம் கொண்டார்
மற்றொருவர்..
பேசுவது என்னவென்றே
மறந்தாலும்..
பேசியே தீர்ப்பேன்
என்றார் ஒருவர்..
பேசவே தெரியலனாலும்
ஆட்டம் ஆடி
பாட்டு பாடுவேன்
என்றார் மற்றொருவர்..
பாவம்..
பிழைக்க தெரியாத
பதர்கள்..
எத்தனை
சொற்பொழிவு நிகழ்த்தி
என்ன பயன்..
இறுதியில்..
நீயளிக்கும்
ஐம்பது ரூபாய் நோட்டிற்கு
தான் மதிப்பு..
இலவசமாய்..
கிடைக்க போகும்
பொருட்களை அள்ள
இடப்பற்றாக்குறை..
மானம் காக்க
உடுத்தியிருக்கும்
சட்டையை கிழித்து..
அள்ளி முடிந்து கொள்ள
போகின்றனர்
நீ தந்த இலவசங்களை..
இதற்கு தானே
ஆசைப்பட்டாய்
பாலகுமாரா..!!