விதியின் விளையாட்டு12
மனோஜ் முன் வைக்கப்பட்ட போட்டோவை பார்க்க சொன்னார் மனோகரன்.
வேண்டா வெறுப்புடன் அதை எடுத்த பார்த்தவனுக்கு ஆச்சர்யம்!
ஏனென்றால் அதிலிருப்பது ஷிவானியின் போட்டொ என்றாலும் அச்சு அசல் ரிஷானிபோலவே இருக்கிறாள்.....!
ஒரே ஒரு மாற்றம் கலர் குறைவு, புன்னைகை இல்லாமல் காணப்பட்டாள், ரிஷானியோ! எப்பொழுதும் புன்சிரிப்புடன் அழகாக தோற்றமளிப்பாள்.
மனோஜ்க்கு போட்டோவை பார்த்ததும் பெண்ணை பிடித்துப்போனது ஆனால் தந்தையிடம் அதை பெரிதாக காட்டிக்கொள்ளாமல் பார்த்ததும் போட்டோவை தந்தையிடம் நீட்டினான்........
உடனே தந்தை உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும் திங்கள் அன்று பெண்ணை பார்த்து பேசிமுடிக்கப்போகிறோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
ரிஷானியின் வீட்டில்.........
ஷிவானிக்கும் ரிஷானிக்கும் கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது..........
கோவத்தில் ரிஷானி அழுதுகொண்டே மொட்டை மாடிக்கு சென்றவள் மதன் எற்கனவே கொடுத்த புத்தகத்திலிருந்த ஒரு பேப்பரில் அவன் செல்நம்பர் இருக்கவே அதை எடுத்து அவனிடம் பேச ஆரம்பித்தாள்......!
இதை மறைந்து நின்று ஷிவானி பார்த்துக்கொண்டிருந்தாள்!!!!!!
போன் பேசிவிட்டு கீழே வந்தவளை கவனியாது போல் நின்றாள் ஷிவானி,,,,,
ஷிவானி பார்த்ததை ரிஷானியும் பார்க்கவில்லை.
அன்று இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை!
அடுத்தநாள் காலை 9மணி அளவில் ரிஷானியின் வீட்டு முன்பு ஒரு கார் வந்து நின்றது????
விதி தொடரும்.......