இறுதிப் பிரதி

இறுதிப் பிரதி
அந்த நாள் இனிய நினைவுகள்
என் மனச் சரிவில்
உதிர்ந்து உலர்ந்த சருகுகளான போதும்
காலமெனும் காற்று வந்து அடித்துச் செல்லாது
என் கரங்களால்
கெட்டியாகப் பிடித்திருப்பேன். அவை
என் மனதில் நீ எழுதிய
கடிதங்களின்
இறுதிப் பிரதிகளல்லவா !

எழுதியவர் : நேத்ரா (27-Mar-14, 2:59 pm)
பார்வை : 102

மேலே