அம்மா

தினமும் காலை
அலைபேசியில் அழைக்கும்
அம்மா...
அவளின்
மௌன வலிகளை
வார்த்தைகளால் கோர்ப்பால்
நான் உள்ளத்தால் வாங்கி
உணர்வற்றவளாய்
என்னை உருவாக்கி
கொள்வேன்!
இப்படித்தான் வழக்கம் போல்
ஒரு நாளும் ......
ஆனால் அப்பொழுது வலி கொடுத்த
மித மிஞ்சிய வேதனையால்
அழுதே விட்டாள்
ஆமாம்
சில நேர மௌனத்திற்கு பிறகு
தான் தெரிந்தது
ஒவ்வொரு நாளும்
துயரம் மிகுந்த சொற்கோவையை
சுமந்து தரும்
அலைப்பேசியும் அழுதது
என் கண்ணீரால்
என்று....

எழுதியவர் : புவனா சின்னுசாமி (27-Mar-14, 5:30 pm)
சேர்த்தது : புவனா சின்னுசாமி
Tanglish : amma
பார்வை : 64

மேலே