எங்கள் வீடு

வாசலிலே வாசனைகள் பூத்திருக்கும்
ஜன்னலோரம் தென்றல் வந்து காத்திருக்கும் !

கீற்றுகளின் இடைவெளியில்
கதிரோளிதான் எட்டிப்பார்க்கும்!

கூரைகளின் ஓட்டைகளில்
மேகமழை கொட்டித்தீர்க்கும்!

மழைநீரில் வாசலிலே
காகிதக் கப்பல்கள் ஓடும்!

வெயில் நேரம் இன்னிசையாய்
கருங்குயில்கள் பாடும்!

கிணற்றடியில் தவளைகளின் மந்திரங்கள்
காற்றலையில் கீற்றுகளின் சங்கீதங்கள்!

மாமரத்தின் கிளைகளிலே
மாங்கனிகள் பழுத்துத் தொங்கும்!

கிளிகளும் குயில்களும்
மகிழ்ச்சியோடு வந்துத் தங்கும்!

பூமியிலே ஒரு சொர்கமென
சாமிகூட வியந்து பார்க்கும்
வசந்தமாளிகை
எங்கள் வீடு!!

எழுதியவர் : பாரதி செந்தில்குமார் (27-Mar-14, 7:31 pm)
Tanglish : engal veedu
பார்வை : 138

மேலே