எங்கள் பள்ளி

மதில் சுவர்களில் கூட
மாணவர்களின் ஒலி எதிரொலிக்கும்!
சுவரோர விரிசல்கள்
பள்ளியின் வயதைக் குறிக்கும்!

மதிய உணவு வேளையிலே
பல பதார்த்தங்களின் மணம் பறக்கும்!
தோட்டத்தின் மலர்கள் கூட
புது பாடம் கற்றுக் கொடுக்கும்!

பாழடைந்த சுவர்களிலே
படர்ந்திருக்கும் ஒட்டடைகள்
பாருலகம் ஆண்டுச்சென்ற
மன்னர்களின் கதை படிக்கும்!

சுவரோர பல்லிகள் எல்லாம்
செந்தமிழிலே பலன்கள் சொல்லும்
வட்டமிட்டு சுற்றும் வவ்வால்கள்
திட்டமிட்டு வாழ்க்கை நடத்தும்!

ஏதோ ஒரு எண்ணத்தில்
எழில் சூழ்ந்த வண்ணத்தில்
நுழைந்து விட்ட வண்ணத்துப்பூட்சிகூட
மாமேதையாகி வெளியேறும்!

கற்க வரும் விதைகளைஎல்லாம்
கற்றுத் தேர்ந்த விருட்சமாக்கி
பல உலக நாடுகள் சுற்றவைக்கும்
எங்கள் பள்ளி!!

எழுதியவர் : பாரதி செந்தில்குமார் (27-Mar-14, 7:41 pm)
Tanglish : engal palli
பார்வை : 1248

மேலே