+காதல் கொண்டேன்+

ஜோடிப்புறா ஒரு
கோடி மனதில்
ஓடி விளையாடிடும்
காட்சி கண்டேன்
தேடித் தவித்திட்ட
இன்பம் மனதை
நாடி அடைந்திட
நாட்டம் கொண்டேன்
பாடிக் களித்திட்ட
பாக்கள் ஒவ்வொன்றும்
ஆடிக் கொண்டாடிடும்
ஆட்டம் கண்டேன்
மாடி மறைவினில்
நீயும் மறைவாய்
நின்றெனைக் கண்டதால்
காதல் கொண்டேன்