ஒரு பேச்சுக்கு சொன்னா

தொண்டர்கள் : இன்ஸ்பெக்டர் ஐயா...! எங்க தலைவர யாரோ ராத்திரியோட ராத்திரியா கடத்திட்டு போய்ட்டாங்க.... அவரு உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு பயம்மா இருக்கு....
இன்ஸ்பெக்டர் : சரி...சரி...கம்பிளைன்ட் எழுதிக் குடுங்க... விசாரிக்கிறேன்.... உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா....?
தொண்டர்கள் : பொதுமக்கள் மேலதான் சந்தேகமா இருக்குதுங்க...
இன்ஸ்பெக்டர் : பொதுமக்கள் மேலயா..?
தொண்டர்கள் : ஆமாங்கய்யா... ஏன்னா... கடைசியா எங்க தலைவரு நேத்து சாயங்காலம் மேடையில பேசும்போது "நாட்டுக்காக நான் உயிரையும் குடுக்கத் தயார்" னு பேசினாரு சார்.... அதுக்கப்புறம் வீட்டுக்கு போனவர்தான் காலையில இருந்து காணோம் சார்....