துலாபாரம்

அன்றாடம்
இந்த வாழ்வை
நினைத்து
அழுது புலம்பி

என்னடா வாழ்க்கை
ஏனிந்த வாழ்க்கை
என்ற எண்ணங்கள்
யாந்திரீக உலவலாக மனதில்

என்ன தேவை என்றே
தெரியாமல்
தேடிக் கொண்டே
வெறுப்புத் தீயை
உமிழும் வாழ்வில்

தூக்கு கயிற்றில்
முழங்களும்
தூக்க மாத்திரையின்
தேவைகளும்
தண்டவாளத்தின்
தஞ்சங்களும்
தத்தளிக்கின்றன

அழுகிப் போன கை
அசைக்கவே முடியாத
கால்கள்
சதையா
உள்ளிருக்கும் குடலா
என்று
உணர முடியாத உடல்

அழுக்கு கூடுகளை
அடர்ந்து கட்டிய ஆடை
அகோரத்தின் உச்ச கட்டம்
அந்த விழிகள்

காயங்கள்
மட்டுமே
கொண்ட காயம்
ஓவ்வொரு
நிறுத்தத்திலும்
நிற்காமல்
ஏறி இறங்கி
காய்கறி
வியாபாரம்
செய்யும்
அவனது
நம்பிக்கை
கற்களால்
ஏறிக்கொண்டே போகிறது
வாழ்க்கை துலாபாரம்

எழுதியவர் : (28-Mar-14, 9:15 pm)
Tanglish : thulabaaram
பார்வை : 90

மேலே