உன் பிறந்தநாள் - சிவகாசியில்

வானமவள் தலைவிரிக்கயில்
தவறி விழுந்த விண்மீன்னடி நீ..

மாறி விழுந்த மண்ணோ
மாரி காணாத மண்தான்
இருந்தும் பசுமை பூக்கச்செய்தாய்
இனிய நட்பென்னும் பெயரிலே!

பள பளக்கும் மத்தாப்பும்
பட படக்கும் பட்டாசும்
பேச்சில் கொண்டு என்னைப்
பேரின்பத்தில் ஆழ்த்துகிறாய் தினமும்

புல்லாங்குழல் இசை மறந்து நிற்கிறது
புயலோ திசை மறந்து திகைக்கிறது
உன் பாடலோசை கேட்டு - அவை
உண்ணத நட்பு பாராட்டவும் கூடும்..

தேனில் விழுந்த நெல்லிக் கனியாய்
தேனும் இனித்து
தேடி வந்தவளையும் இனிப்பித்து
தேவதையாய் உலவும் தேனே...

உன் பிறந்தநாள் வருக...
பல்லாண்டு காலம் வருக....வருக..

எழுதியவர் : ந.நா (28-Mar-14, 11:37 pm)
சேர்த்தது : நநா தமிழ்
Tanglish : un piranthanaal
பார்வை : 96

மேலே