முடிவில் கல்யாண சாப்பாடு
வீட்டின் ஒரு கதவை தாழ் போட்டு மற்றொரு கதவில் சாய்ந்தவாறு சாப்பிடஆரம்பித்தாள் ராணி...
"அடியே உள்ள போடி உங்கப்பா போன் பண்ணாரு உன்ன இப்ப பொண்ணு பாக்க வந்துட்டு இருக்காங்களாம் உள்ள போ உள்ள போ" அம்மா பார்வதி..
நா ..... ராணி எதுலுமே துருதுரு, வேகம், அதிகபடியான பேச்சு,படிப்பு.... நல்ல படிப்புதான்(B . E 3 arrears.) பிடிச்சுது சினிமா பிடிக்காதது அதுதான் ஏன்னா எனக்கு என்ன வேணும்னு தெரியாது புரியவும் புரியாது. கொஞ்சம் நிறம்.. அம்மா அப்பா இவங்க மட்டும்தான் ,அப்பா செல்லம்,அப்பா கடை வச்சு இருக்காரு, சொந்தமா சின்ன வீடு, ஆன ரொம்ப சந்தோசம் இங்க மட்டும்தான் "
ம்மா என்னம்மா இப்பதான் சாப்டலாம்னு இருந்தேன்... பசிக்குது ம்மா.அவங்கள வேணா வெயிட் பண்ண சொல்லுங்க நா சாப்டனும்..
பார்வதி அவளுக்கு தகுந்த உடைகளை எடுத்துக்கொண்டு இருக்க "உங்க அப்ப பெத்தவளே ரொம்ப பேசாத... வர்றவன் இதெல்லாம் சகிக்சுட்டு இருக்கமட்டாண்டி..இங்க வா இது சரியா இருக்கும்ல
ம்மா வர்றவன் என் சேலைய மட்டும் பாத்த போதுமா ...ஏம்மா...
பார்வதி... பார்வதி ஏ எங்கடி இருக்க...பதட்டத்துடன் அப்பா சிவகுமார்
"ம்ம் சொல்லுங்க இங்க இருக்கேன் " என்ற வார்த்தைய முதல் அனுப்பிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள்...
"அவங்க வந்துட்டாங்க எங்க அவ?" என்று அருகில் இருந்த சேரில் அமர்ந்தார் ."அவ அங்க இருக்கா ,அவளுக்கு இப்ப சாப்படுனுமாம் ஒரே அடம் ...என்னானு கேளுங்க"
" ராணி இங்க வா உங்கம்மா என்னமோ சொல்றா..இங்க வா" என்ற சிறு அதட்டலுடன்..ஆனால் கோவம் இல்லை
பாதி சீவாத தலையுடன்," ப்பா எனக்கு இப்ப எதுக்கு கல்யாணம். வயசு அவ்ளோவா....ப்பா, கொஞ்சம் நாள் போகட்டுமே. ..அப்புறம் பாக்கலாம் ப்பா " கொஞ்சலுடன்!!!
" இங்க வா என் பொண்டாட்டி பெத்தவளே இங்க.. வா " என அருகில் அழைத்து சேருக்கு கீழே அமர செய்தான்.. தலை முடியை சரி செய்வதற்கு "உனக்கு வயசு இருக்கும் ஆன எங்களுக்கு வயசு போகுதுல. நா உன்ன நல்ல படியா பாக்கணும்ல.... இங்க பாரு இப்பவே இவளுக்கு மாசமான ஆஸ்பத்திரி போகலேன்னா சாப்பாடு போடா மாட்டா,,,,,,,,சரி அத விடு."நீ யாரையும் நினைக்கிறயா என்ன"சொல்லு
நா உனக்கு ஹெல்ப் பண்றேன்..
"ப்பா அப்டிலாம் யாரும் இல்ல ப்பா " சரி இப்ப ரெடியாகனும் அவ்ளோதான!!!.. . "நூடுல்ஸ் மாதிரி வந்துடறேன்" அப்பாவின் தொடைய கிள்ளிவிட்டு பறந்தாள் அறைக்கு ராணி
"அடுத்த 15 நிமிடத்தில் ராணி வீடு நிரம்பியது "
20 நபர்களுக்கு குறையவில்லை " முன்வரிசை வயதுக்கு ஏற்றார் போல முன்னுரிமை வழங்கப்பட்டது"
ராணி அமைதியின் சிலையாக அமர்ந்து இருந்தாள்
பார்வதியும் பக்கத்துவீட்டு லக்ஷ்மி அக்காவும் அவளுக்கு அழகை கூட்டிக்கொண்டு இருந்தார்கள்..
லக்ஷ்மி "ராணி இங்க உனக்கு எவ்ளோ வாய்னு எங்களக்கு தெரியும்,ஆன வெளிய இருக்கறவங்களுக்கு தெரியாது..." நீ போகபோற இடம்
பார்த்துக்கோ"என்றாள்
" அக்கா உங்களுக்கும் இப்டித்தான் உங்க பக்கத்துக்கு வீட்டு அக்கா சொள்ளிகுடுத்தாங்களா" " இது ராணி.
"ராணி இந்த வாய் தான் கூடாது பெரியவங்க சொல்றத கேளு" என்றவாறு அரிதாரத்தின் முடிவினில் இருந்தார்கள்...
"அவளுக்கு இது சுத்தமாக பிடிக்கல" என்று உணர்ந்தாள் பார்வதி "
" ம்மா மாப்பிள வந்திருக்காரா " "ஏ அறிவு அவரு வராம அவோரோட வேட்டி சட்ட மட்டுமா பொண்ணு பாக்க வரும்"....வந்து இருக்காரு !!! நா இன்னும் பாக்கல... வேணா பார்த்துட்டு வந்து சொல்றேன்" -பார்வதி
"ம்மா இங்க பொண்ணு யாரு நீயா நானா ? அதெல்லாம் நானே பார்த்துகறேன் அந்த பக்கம் வராத சரியா"தன் வழக்கமான பேச்சு-ராணி
"வெளியே அனைத்து வித பேச்சுகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அடுத்து என்ன பேச என்று இருந்த கூடத்தில் ஒரு சிறு அமைதி"
"என்னபா.... பேசறது பேசியாச்சு பொண்ண பார்த்துறலாமா " என்றார் கூட்டத்தில் இருந்த சர்க்கரை வியாதிக்காரர் (கையில் டி கப்புடன்)"
"பார்வதி" .....என்ற சொல்லை கேட்டவுடன் ராணி கையில் டி டம்ளர் உடன் (ஹோட்டல் சர்வர் அலங்காரம் பண்ண மாதிரி ) தனக்கு வராத முகபாவனையுடன் வந்தாள்...
சிவா"இவர் தான் மாப்பிள, நல்லா பார்த்துகமா"
அதற்குள் பார்வதி, கையில் இருந்த சுமையை பிடுங்கி அவளையும் அழைத்து சென்றாள்"
" பொண்ணு ரொம்ப வெட்க படுதுங்க" கூட்டத்தில் இருந்த அதே வியாதிக்காரர்.
"ம்மா நா இன்னும் அவர சரியா கூட பாக்கல, நீ மட்டும் ஓரத்துல இருந்து நல்லா பாத்தில"- ராணி
"அடிவாங்க.. போற அமைதியா இரு"
" ராணி உன்கிட்ட மாப்பிள பேசனுமாம் உன்ன வரசொல்றாங்க "-லக்ஷ்மி அக்கா
ராணி வெளியே வந்து... அப்பாவின் கண்களை மட்டும் பார்த்து ஒப்புதல் வாங்கிகொண்டு மொட்ட மாடியை நோக்கி சென்றாள்....
"மாப்பிள -டக் இன் , லைட் ப்ளூ ஜீன், வெள்ளை சட்டை,நிறம் எல்லோருக்கும் பிடிக்கற நிறம்தான்.கண்ணு கண்ணாடி, மூக்கு கொஞ்சம் பெருசு கோவம் அதிகமா வரும் போல, தொப்ப வர ஆரம்பிக்குதுன்னு நினைக்கறேன்"
"ஆன எப்டி பேசுவார்னு தெரியாம ஒரு ஓரத்தில் தனியா போய் நின்றாள் ராணி "
"அவனும் அப்டியே "
2நிமிஷ அமைதி (ஒரே நேரத்தில் ஒரே வார்தையில் மோதிகொண்டார்கள் ) "உங்க பேரு என்ன "
ராணி-"நீங்க முதல்ல சொல்லுங்க " (அவனோட குரல் பிடித்து இருந்தது அவளுக்கு )
பேரு ரொம்ப பெருசு "ஸ்ரீ "
ரொம்ப பெருசுங்க.... என்னால சொல்லமுடியாது -ராணி
இப்ப ஸ்ரீ -"உங்க பேரு" ,"ஏ பேரு ரொம்ப சின்னதுதான் ராணி உங்களால கஷ்டப்பட்டுதான் சொல்லமுடியும்!!!! "
"ஏன் அப்டி சொல்றீங்க ?" ஆமா உங்களுக்கு "ஸ்ரீ " ங்கற பேரே பெருசு,அதனால சொன்னேன்"
"அவன் முகத்தை சுருக்கிகொண்டான் "
ராணி ஆரம்பித்தால்-"உங்களுக்கு இது எத்தன்னாவுது தடவ "
"வாட் "
"சாரி....எனக்கு இதுதான் முதல் தடவ மாப்பிள பாக்கறது அதான் கேட்டேன் "
"எனக்கும் அப்டித்தான் இதான்........." ஸ்ரீ பற்களில் இடைவெளி இல்லை
"ராணி-(அவ இவ்ளோ பொறுமையா பேசாம இருந்தது இல்ல புதுசா இருந்துச்சு... ஆன அவளுக்கு சுத்தமா பிடிக்கவே இல்ல.வெடிக்க ஆரம்பிச்சா ) "நா ரொம்ப பேசுவேன்... இடம் ,பொருள் தெரியாம கூட பேசி இருக்கேன்... சில பேரு சுட்டி னு சொல்லுவாங்க ,சில பேரு லூசு னு சொல்லுவாங்க,உங்களுக்கு எப்டின்னு தெரில..?.சகிப்புதன்ம அதிகம் இருந்த தப்புசீங்க ..இல்லேன்னா......அப்புறம் எனக்கு எது பிடிக்கும்? பிடிக்காது? னு தெரிஞ்சுக்க அசை படாதீங்க... எனக்கு அதுல சுத்தமா நம்பிக்க இல்ல,..அதே போல நானும் கேக்க மாட்டேன் ..இப்பவே எல்லாம் தெரிஞ்சா...அது வேணாம்..பட்டு புரிஞ்சுக்குவோமே
மறக்கமாட்டோம்...
ஸ்ரீ ஒரு பெரிய மூச்சு விட்டு அவ முன்னாடி வந்து நின்னான்
இன்னும் முடியல(ஒரு சின்ன சிரிப்போடு) "அப்புறம் லவ் இதுல நம்பிக்கை இல்லைன்னு சொல்லமாட்டேன்.எல்லோரும் லவ் லவ் னு சொல்லிட்டு இருக்காங்க.அதனாலேயே அதுல விருப்பமே இல்லாம போய்டுச்சு..அதுமட்டுமில்ல எனக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்க போகுது... வித்தியாசமா இருக்க ஆசைப்பட்டேன்... அப்டித்தான் இருக்கேன்....
நீங்க எப்டி?
ஸ்ரீ-(வெறும் மூச்சு காத்து தான் வந்ததது )
"பரவால்ல நீங்க வித்தியசமானவரா இல்லாம இருந்தாலும்......இந்த பத்து நிமிஷத்துல பேசி நமக்குள்ள எதாவுது தோனுமானு தெரில " நீங்க கீழ போய் என்ன சொன்னாலும் எனக்கு சரி தான்" நா சாப்ட்டு வச்ச மீதி சாப்பாடு இருக்கு..சாப்ட்டு தண்ணி குடிச்சேன எல்லாம் மறந்துடும்" ....இதான் ராணி
"ராணி மாதிரி வைக்க உங்களால முடியுமான்னு தெரில ஆன ஏ அப்பாவால முடியும்"-ராணி முடித்தாள்.
ஸ்ரீ-(அமைதியாய் எல்லாவற்றையும் கவனித்து கொண்டு இருந்தான்) எனக்கும் சேர்த்து நீங்களே பேசிடிங்க..இப்ப நா பேச ஆரம்பிச்சா அவ்ளோதான் எல்லாரும் மேல வந்துருவாங்க,,,ம்ம் பரவால நல்லா பேசறீங்க.....
"இந்த "நல்லா" ங்கற வார்த்தைக்கு என்ன அர்த்தம் .. லூசுனா???
"போலாம் கீழ" என்று மாடிக்கு முடிவு அட்டை போட்டான்-ஸ்ரீ
இவர்கள் வருவதை பார்த்து கூட்டம் அமைதியானது.ராணி மீண்டும் தன் அறைக்கு சென்றாள்-ஸ்ரீ தன் இடத்தை பற்றிகொண்டான்..வழக்கம் போல வார்த்தைகளை வீசிவிட்டு சென்றார்கள் மாப்பிள வீட்டார்....
அவர்களை வழியனுப்பிவிட்டு ராணியிடம் "என்னம்மா சரிதான... அப்பா பாத்தது"-சிவகுமார்
"ப்பா அவரு என்ன ஆடா மாடா பாத்ததுனு சொல்ற ". ஓ இப்பவேவாடி..பாருங்க என்ன சொல்றனு என்று ஜமுக்காளத்தை மடித்தவாறு உள்ளே சென்றாள் பார்வதி.
சிவகுமார், ராணியின் கண்ணை பார்த்து கேட்டான் "உனக்கு என்ன தோணுதோ அத சொல்லு.நா உனக்கு எப்பவும் இப்டித்தான் இருப்பேன்... பயபடாம சொல்லு.சரியா... இல்ல...??? சரி இல்லையா ???
ப்பா அப்டிலாம் இல்லப்பா..எனக்கு தெரியாதா!!! எனக்கு என்ன வேணும் என்ன செய்யணும் உங்களுக்கு நல்லா தெரியும் ப்பா...என்ன கிணத்துலையா தள்ளிவிட போறீங்க... கல்யாணம்தான பண்ணிவைக்கபோறீங்க..எனக்கு சரிதான் ப்பா....அவங்களுக்கு சரின்னு சொன்னாங்கனா நீங்க அடுத்த வேலைய பாருங்க "
சரி மேல அப்டி என்ன பேசனீங்க?? இஷ்டம் இருந்தா சொல்லு இல்லேன்னா வேணாம்...சிவகுமார்
ம்ம் இதகேளுப்பா ....நானே சொல்லனும்னு இருந்தேன் ஒரு வார்த்த தான் பேசனேன்...ராணி
நீ ஒரு வார்த்த பேசின...சரி நா நம்பறேன்... சொல்லு என்ன பேசின அப்டி -சிவகுமார்
அட ஆமாப்பா "நா அதிகமா பேசமாட்டேன்னு சொல்லிட்டு பேசவேஇல்ல.... ப்பா உங்க மேல சத்தியமா " கண்டிப்பா என்ன அவருக்கு பிடிக்காதுனு நினைக்கறேன் "
"ஹே உன்ன யாருகாவது பிடிக்கமா போகுமா ...இங்க வா, இவன் இல்லேன்னா என்ன வேற ஒருத்தன பார்த்துக்கலாம்"...சிவகுமார்
"அங்க என்ன கொஞ்சல் வேண்டி இருக்கு ...ஏங்க, உங்களுக்கு போன் அடிக்குது பாருங்க" என்று சமையல் அறையிலிருந்து மீண்டும் வார்த்தைகளை அனுப்பினாள் பார்வதி...
சிவகுமார் "ஹே மாப்பிள வீட்ல இருந்து போன் வருது...ஹலோ சொல்லுங்க..
ராணி கண்ணாடி முன்பு " இது புதுசா இருக்குல.. என்ன பத்தி ஒருத்தன்கிட்ட சொன்னது " எதோ ஒன்னு புதுசா தோணுது என்னனுதான் தெரில "என்றவாறு தன் சடையின் பின்னலின் முடிவில் இருந்தாள்"
"இருங்க தரேன் .. ராணி ராணி இங்க வா உனக்குதான் போன் " மாப்பிள பேசறாரு பேசு பேசு...என்றவாறு வெளியே சென்றான் சிவகுமார்
ம்ம் சொல்லுங்க...
எனக்கு வீட்டுக்கு போரதுகுல்லையே புதுசா எதோ தோணுது... நீ சொன்னமாதிரி,,...உங்க அப்பா மாதிரி இல்லாட்டியும் ஓரளவுக்கு ராணி போல பார்த்துக்குவேன்... சரின்னு மட்டும் சொல்லிட்டு phoneஅ வைச்சுரு... வேற ஏதும் சொல்லகூடாதுன்னு நினைக்கறேன்...
"சரின்னு சொல்றேன் " என்று சொல்லிவிட்டு ஆப் செய்தாள்...
"மாப்பிள என்னசொன்னாரு" என்று கோரஸ் பாடிக்கொண்டு உள்ளே வந்தார்கள் -சிவகுமார் -பார்வதி
"ம்ம் மாப்பிள இனிமேல் என்ன அமைதியா இருக்கவேணா... ,நல்லா பேச சொன்னாரு" என்று
சொல்லியவாறு மீதி இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்ட ஆரம்பித்தாள்" " இறுதி வரையில் தண்ணீர் குடிக்காமல்".....