விதியின் விளையாட்டு13
ரிஷானியின் வீட்டிற்கு முன் நின்ற காரிலிருந்து மனோஜ் குடும்பத்தினர் வந்து இறங்கினர்.
அப்பா அவர்களை வரவேற்று உட்கார வைத்தார்.
ரிஷானியின் அம்மாவிடம் ஷிவானியை அழைத்து வரும்படி சொன்னார்,,,,
தாய் செல்வதற்குள் ஷிவானியும் ரிஷானியும் உள்ளிருந்து வந்தனர்......
ஷிவானி கையில் காபியுடன் கூடிய தட்டை ஏந்திக்கொண்டு குனிந்த வண்ணம் நடந்து வந்து கொண்டிருக்க அவளுடன் ரிஷானியும் மௌனப்புன்னகையுடன் வந்து கொண்டிருந்தாள்....!
மனோஜ் குனிந்த தலை நிமிராமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
இருபெண்களையும் பார்த்ததும் மனோஜின் தந்தைக்கு ஒரே ஆச்சர்யம்!!!!
இருவருமே ஒரே மாதிரிதான் அழகு! இருந்தும் இளையவள் தனி கலைதான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார்......
தன் மகனின் ஏக்கம் இப்பொழுதுதான் அவருக்கு புரிந்தாற்போல் மனோஜை ஒரு பார்வை பார்த்து புன் சிரிப்பு சிரித்தார்........
ஷிவானி அனைவருக்கும் காபி பரிமாற பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.
மதன் கல்லூரிக்கு சென்றதும் ரிஷானியின் வகுப்பறைக்கு சென்றான்.......
ரிஷானி வராததால் ஏக்கத்தோடு அங்கிருந்து சென்றவனை பார்த்த ரிஷானியின் தோழி அவனிடம் சென்று,,,,,,,,
யாரையோ தேடின மாதிரி இருக்குது என்று கேட்டதுதான் தாமதம் ஒரு கும்பல் வந்து மதனை இழுத்துச்சென்றது??????
ஷிவானியிடம் மனோஜின் அப்பா, அம்மா பேசி சம்மதமா? என்று கேட்டனர்?
மனோஜும் அவளது பதிலை நோக்கினான்.
ரிஷானியும் மனோஜும் ஒருவரையொருவர் சாதாரணமாக பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.
ஷிவானி மௌனமாக பதில் சொல்லாமல் இருந்தாள், ஓபனாக பேசு என்ற மனோஜின் அம்மா மனோஜை புடிச்சிருக்கா? திருமணத்திற்கு சம்மதமா? என்று கேட்டார்............
விதி தொடரும்........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
