அப்புவின் சந்தேகம் தொடர்கிறது

அப்புவின் சந்தேகம் .. தொடர்

டே .. அப்பு

என்னா அம்மா

இன்னும் என்னடா லேப்டாப்பையே பாத்துண்டு இருக்கே. மூடி வெச்சுட்டு தூங்கு

அம்மா அம்மா

என்னடா

இந்த படத்தப்பாரும்மா

என்னடா இருக்கு அந்தப்படத்துல

ரெண்டு எறும்பு. ஒரு எறும்பு பெரிய கல்ல அதோட முதுகுல தாங்கிண்டு இருக்கு அம்மா

அதெப்பிடிடா .. எறும்பு கல்ல சுமக்கும்

நீ பாரம்மா

ஆமாம். பெரிய கல்லு

அந்த இன்னொரு எறும்பு வழில நிக்குது. தப்பில்லையாம்மா

முன்னால இருக்குற எறும்பு கல்லை சுமந்திருக்கும் எறும்புக்கு ஒரு சப்போர்ட் குடுக்குது. பாரம் தாங்க முடியாம அந்த எறும்பு கல்லை விட்டுடுச்சுன்னு வெச்சுக்கோ .. அப்போ என்ன ஆகும் .. சொல்லு

கல்லு உருண்டு கீழ போயிடும். ரெண்டு எறும்பு நசுங்கிடும். உயிர் போயிடும்.

கரெக்ட். அதனாலத் தான் முன்னால நிக்கற எறும்பு
மத்த எறும்புக்கு ஒரு சின்ன சப்போர்ட் கொடுத்து, மெதுவா கால பின்னால வச்சு இறங்கும். அப்போ கல்ல வெச்சுருக்கற எறும்பு கொஞ்சம் முன்னால வரும். இப்படி கொஞ்சம் கொஞ்சமா நகர்த்தி வழியில் இருந்த கல்லை தள்ளித் தள்ளி ஒதுக்கி ஒரு ஓரமா போட்டுடும்.

இவ்வளவு பெரிய கல்ல அந்த சின்ன எறும்பு ஏம்மா தூக்குது. சின்னக் கல்லாப் பாத்து தூக்க வேண்டியது தானே

நம்ம எல்லாரையும் காப்பாத்தற கடவுள் இந்த எறும்ப மாதிரித்தான் நாம வாழற இந்த பெரிய உலகத்தையே சுமக்கராறு. அது தெரியுமா உனக்கு

தெரியாதம்மா

அப்பா நானும் இப்படி பாரத்தை சுமக்கனுமா அம்மா

ஆமாம். ஆனா இப்ப இல்லை. நீ உங்க அப்பாவ மாதிரி பெரியவனா ஆனப்பறம்

எனக்கு பயமா இருக்கு அம்மா நான் இப்படியே சின்னவனா இருந்துட்டா

எழுதியவர் : (28-Mar-14, 10:23 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 150

மேலே