மனிதன்
கற்கால மனிதனிடம்
காணாத வினோதம்
இக்கால மனிதனுக்கோ வாழ்வில்
எத்தனை வேகம்
பணத்தைத் தேடித்தேடி
ஆரோகியத்தைத் தொலைக்கிறான்..
அது கிடைத்தவுடன்
ஆரோகியத்தைத் தேடித்தேடி
பணத்தைத் தொலைக்கிறான்..
எதிர்கால வாழ்வை எண்ணி
நிகழ்கால வாழ்வைத்
தொலைப்பதில்லை எந்த உயிரினமும்
ஆறறிவுள்ள மனிதனைத்தவிர..!