சரக்கு வாகனம்
ஆறு கரங்கள் கால்களாக
நடந்தே தேய்ப்பான் சாலை நிரம்ப
உயிர் மட்டும் நீங்கலாக !
மனிதன் இயக்கும் தந்திரமாக
இயந்திரமாய் இயங்கி கிடப்பான்!
பொதிகளை சுமந்து சேர்க்கும் பத்திரமாய்!
வங்கியில் வைத்த புத்தகத்தை மீட்டெடுக்க
காலம் நேரம் பாராமல் பொழுதுழைத்து
கடனை முறிக்கும் மந்திரமாக!!
மனிதன் இயக்கும் இயந்திரமாம்!
பள்ளம் மேடு பாராமல்
காடு மேட்டை தனி ரோடாக்கும் !!
வயலில் இருக்கும் கரும்பை சுமந்து
கசக்கி பிழியும் ஆலையில் கொண்டு சேர்த்து
உழவன் வாயில் இனிப்பை சேர்க்கும் !
அவனுருவாக்கும் பொருட்களெல்லாம்
வாரச் சந்தை வந்து சேர்த்து வயிறார வாழ்த்திட ...
வாழ்வான் உழவனவன்
மனிதன் வாழ இருப்பிடத்தை
பொருட்களெல்லாம் முதுகில் சுமந்து
உருவாக்கிடும் பொறுப்பாய்!!
உனக்கு உணவாய்
ஆழ்துளை கிணற்றில் இறைத்த நீராய்
டீசல் என்னும் பேராய் உனக்கு தந்திட...
எதற்கும் துணிந்து இழுத்துச் செல்வாய் !!
பொழுது கடந்தும் பொதி சுமந்து
வண்ண விளக்கை ஒளிரச் செய்து
கண்ணை திறந்து பறந்துச் செல்வாய்!
உயிர் உள்ளவரை நீ உழைப்பாய்
களைப்பு என்பது உனக்கிருந்தும்
பெரும் கனத்தை நீ சுமந்தாய்!
உயிரில்லாமல் உறவாடும்
பெரும் உயிரும் நீயே
உன்பெருந்தன்மை எண்ண
மனித மனம் மிகாதே !