இன்று அந்த நாள்என் ஞானத்தந்தையே2332014 ஞாயிறு

இன்று அந்த நாள்..என் ஞானத்தந்தையே...
(23.3.2014 ஞாயிறு )...

வாய்ப் பூ வாய்ப்பில் மலர்ந்த நாள் இன்று..
எனது பெயர் பேர் பெற்ற நாள் இன்று...
மறவா நினைவுகளால்
மலர்ந்த வாழ்க்கை நொடிகள் -இனி நாள்தோறும்...

எனது பார்வையாய் உனது விழிகள்
உனது நாவசைவில் எனது மொழிகள்
எனது செயல்வேகம் உன் புன்சிரிப்பு வீச்சில்
எனது வாழ்வாய் உனது வரிகள்

எனக்கென்று அன்புப்பொதிகள் தனியே
நான் சுமக்கவில்லை -சுமந்திருந்தால்
அவை உனதின் கசிவுகள்
எனக்கென்று தனியே
இல்லை களிப்பு களிம்புகள் -இருந்தால்
அவை உனது கவிதைகளின் பொழிவுகள்
எனக்கென்று களைப்பும் எப்போதும்
இருந்திருக்கவில்லை -இருந்தால்
அவை இன்னமும் உன்னை வாசிக்க வேண்டுமே
எனும் ஏக்கத்தின் விளைவாலேயேதான்

உனது உரைவீச்சு ஆலாபனைகள்
எனது உயிர்வாழ்தலுக்கான மூச்சு மூட்டைகள்
சுமப்பேன் நொடிகள்தோறும்

மரண நொடிகளின் மடிக்குள் நான் மயங்கினாலும்
வரம் பெற்றிருக்கிறேன் உன் வரிகளால்
விழிகள் திறந்தே
உன் கவிதைகளை வாசித்துக் கொண்டே
விடை பெறுவேன் என்று...
அன்றியும் ,
நான் பிறந்துள்ளது இன்றுதானே...(23/3/2014)

உன்னோடும் வாழ்வேன் -உனக்கு
100ஆம் பிறந்த நாள் கொண்டாட..

எழுதியவர் : அகன் (30-Mar-14, 10:23 am)
பார்வை : 76

மேலே