தூரல்கள்
எனது
வாழ்வின்
தூரல்
நினைவுகள்.....
ஒன்னாம்ப்பு படிக்கையிலே
ஓட்டப்பந்தயம் வைக்கையிலே
ஒன்னா ஓடிவருகையிலே
ஓரமா நின்ன
ஊர்வசி புள்ள
உசிப்பேத்தி விட
மூச்சித் தெறிக்க ஓடிருக்கேன்
முதல் பரிசு வாங்கிருக்கேன்....
கணக்குப் பாடம் வராதப்போ
டியூஷன் வச்சிக்க சொல்லி
டீச்சர் வந்துக் கேட்டப்போ
கஷ்டமா கொஞ்சம் இருந்ததுங்க....
காலாண்டுல பெயிலா ஆனா
கண்டிப்பா பேசதன்னு
கலா வந்து சொன்னப்ப
கராரா எறங்கிட்டேணுங்க....
அதுல இருந்து அஞ்சாம்ப்பு வரை
ஐயா தான் மொதல் மார்க்கு....
வற்றாத ஊருக்குள்ள
வாய்க்கா வயலும்
நெரம்பக் கெடக்கும்
நித்தம் பஞ்சாயத்து நடக்கும்
மாங்காத் திருடுறதும்
கொய்யாத் திருடுறதும்
கோடை லீவெல்லாம்
கேடாய் போகுமுங்க....