மீண்டும் கிறுக்கி மகிழ்ந்தேனே

( என்றோ ..)
தேன்
பாவை அவளின்
பார்வை பார்த்து
உள்ளம் ரசித்து நின்றேன் ..
( நேற்று ... )
எப்போதும் போல் ..
தனிமையில் நான் - இருந்தும்
தமிழன்னை அருகில் .
வெற்று தாளை எடுத்து
காதல் அதனை கிறுக்கி
கிறுக்கிய தாளை கிழித்து
தூக்கி எறிந்தேன் தூரமாக
எறிந்த தாளை
தேடித் தேடி
கண்ணீர் வந்தது காணாமல்
இருட்டில் கூட
அதையே தேடி
கையில் எடுத்தேன்
கனமாக
வார்த்தை ஒன்றை
விரல் தேட
இமையில் பட்டது
இதமாக
படித்து சுவைத்தேன்
தேன் நினைவை
இதயம் ரசித்த
அவ்வரியை ..
என் தேனே...
மீண்டும் கிறுக்கி
மகிழ்ந்தேனே ..
---இராஜ்குமார்