என் மௌனம்

எல்லா மௌனங்களும் சம்மதம் என்று பொருள் படுவதில்லை

இதோ என் மௌனம்

என் மௌனத்தை சம்மதமாக மட்டும்

மொழி பெயர்த்து விட வேண்டாம் - இது

மென் உணர்வில் பிண்ணி பிணைந்த சோகத்தின் மெல்லிய வெளிப்பாடு

குரல் வலையை நெருக்கும் பிரச்சனைகளால் சூழப்பட்டு குரல் வெளி வராத தவிப்பு

இழப்புகளே வாழ்க்கை ஆனதால் வாய் வார்த்தையை இழந்த பரிதாபம்

கனவோடும் கற்பனையோடும் வாழ்வதால்
வார்த்தைகளில் ஏற்படும் நேர தாமதம்

இத்தனை பேசியும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்கிற ஆதங்கத்தின்
ஒலியற்ற வெளிப்பாடு

இவள் பேசி மட்டும் என்ன பலன்
என்கிற விரக்தியால் ஏற்படுகிற பேச்சற்ற நிலை

அடக்கி வைத்த அத்தனை உணர்வுகளையும் தாண்டி

என் கண்கள் பேசும் வார்த்தையை அறியாதோர்

என் மௌனத்தை

சம்மதமாக மட்டும் மொழி பெயர்த்து விட வேண்டாம்

எழுதியவர் : தியாகராஜன் (30-Mar-14, 2:46 pm)
பார்வை : 381

மேலே