தாயுமானவன்-வித்யா
நல்லாசிரியனாய்
நண்பனாய்
எல்லாமுமாய் என்னை
நெஞ்சிலும்
மார்பிலும்
தோளிலும்
தூக்கிச்சுமந்த
தியாகச் சுமைதாங்கி-நீ...!
வாழ்வின் வழிநெடுகிலும்
என் வலிபோக்கி
வாழ வழி செய்து தந்த
நல்ல வலி போக்கன்-நீ...!
என் இன்றைய சந்தோசங்கள்
உன் அன்றைய
சொல்மிக்க மந்திரங்களின்
உச்சாடனங்கள்.......!
உனக்கான வசதிகளை
குறுக்கிக் கொண்டு
எனக்கு
விசாலத்தின் வீதிகளை
அறிமுகப்படுத்தியவன்-
உன்னை சிக்கனமாய்
செலவு செய்து செலவு செய்து
என்னை
பொக்கிஷமாக்கியவன் -நீ...!
ஆக்ரோச அலைகளின்
கொந்தளிப்பில்
தத்தளித்து தவித்த போதெல்லாம்
சமன் படுத்தி
என்னை கரைசேர்த்த
மாசற்ற மாலுமி-நீ...!
குடும்ப விளக்கை
கட்டுப்பாட்டுக் கை கூப்பி
எந்த சூரைக்காற்றிலும்
அணைந்து விடாமல்
இன்றுவரை பாதுகாக்கும்
தியாகச்சிம்னி-நீ...!
கட்டுப்பாட்டு உளி கொண்டு
செதுக்கி செதுக்கி
என்னை
சமூகத்தில் அந்தஸ்த்துள்ள
ஒரு நல்ல சிற்பமாக்கிய
சிறந்த சிற்பி-நீ...!
நில்லா
கடிகார முள்ளாய்
ஓடி ஓடி ஓயாது உழைக்கும்
உன் நகர்வை பின்பற்றியே
எங்களின் ஒவ்வொரு பொழுதும்
இன்று வரை தொடர்கிறது......!
யாதுமாகி நிற்கும்
நீயே எங்கள் தாயுமானவன்....!
===============================================
உயிரினும் மேலான என் தந்தைக்கு
சமர்ப்பணம்..............!