வல்லமை தாராயோ
அரசர்கள் ஆண்ட எம் இனத்தை அரக்கர்களும், அறிவில்லாதவர்களும், நம்மை அண்டி பிழைக்க வந்தவர்களையும் கொண்டு ஆள வைத்தோம், இன்று அழிந்து கொண்டிருக்கிறோம்....
என் இனத்திற்கு குரல் கொடுக்க இந்தியாவிடம் கை ஏந்தி நிற்கிறோம்.
தமிழன் இந்தியாவுக்குள் அடக்கம், ஆனால் இந்தியா தமிழனை ஒரு நாளும் உள்ளடக்கவில்லை மாறாக உள்ளேயே அடக்கம் செய்து விட முடிவு கட்டிவிட்டது....
தெரிந்தும் கையறு நிலை- வேதனையின் உச்சம்..!
இதை இன்னும் தெளியாதவர்கள் எத்தனையோ இந்த இனத்தில் மிச்சம்....
வாய்ச் சொல்லில் வீரமும்
வழி செய்ய முடியா நிலவரமும்
வலி தான் மிஞ்சுகிறது .....
சுடர் மிகும் அறிவும்
சுடர் வீசும் வாளும் இருந்தென்ன
களமாடும் வீரர்களை தொலைத்துவிட்டோம் ..!
காடுகளில் திரிந்த புலிகள் - இந்த
தமிழ் நாட்டில் கொஞ்சம் உலாவி இருந்தால்
நலமாக இருந்திருக்கும் ...
பாரதி தான் மீண்டும் நினைவில் - "வல்லமை தாராயோ இந்த மாநிலம்
பயணுற வாழ்வதற்கே" ...!