என் இனத்தின் வலி
கருவறையில்
உயிரை கொன்ற பின்
தொட்டில்களை பரிசளித்து
பயண் காண்பதென்ன?
காற்றை நிறுத்தி விட்டு
கருணை காட்டி என்ன ?
நிலத்தை அழித்து விட்டு
விதைகள் தந்து எதற்கு ?
கைகளை அறுத்து விட்டு
துப்பாக்கிகளை
தூக்கி தந்து என்ன ?
உயிர்களை கொன்று விட்டு
உறைவிடங்கள் கட்டுவது
யாருக்கு ?
மானத்தை அழித்துப் பின்
நீதி கிடைத்து என்ன ?
இனத்தை அழித்தப் பின்
ஆறுதல் சொல்லி என்ன
விசாரணை செய்தும் என்ன ?
வடியும் கண்ணீரை
வடிகால் அமைத்து
நாடுகளுக்குள் அனுப்பினால்
பல நூறு சுனாமிகள்
தாண்டவமாடும் ...!
என் இனத்தின் வலி
நிச்சயம் ஒரு நாள்
களமாடும் ....!