உன் பிறப்பின் நோக்கம்
சாதி எனும் பிசாசை
சாம்பலாக கொழுத்தி
சாதித்திட பிறந்தவன் நீ.
இனமிரண்டு அவை
ஆடவர் பெண்டீரென
இசைபாட பிறந்தவன் நீ.
ஆழியடையும் நதிபோல
அனைத்து மொழி கற்று
அன்னை மொழி போற்றுபவன் நீ.
நாட்டுமக்கள் நம்மவரே
நாமனைவரும் ஒருவரே - என்பதை
நனவாக்க பிறந்தவன் நீ.
இல்லாதவரும் உன்னால்
இன்பம் பல பெற்று
புகழோடு வாழப்பவன் நீ.
சாதி மத இன மொழி வேறுபாட்டை
தீயிட்டெரிக்கும் சமரச காதலர்களை
வாழ வைக்க பிறந்தவன் நீ.