உனக்காக
பாதை இதுவென்றால் ---நீ தான்
நடக்க வேண்டும்
புத்தகம் இதுவென்றால் ---நீ தான்
திருப்ப வேண்டும்
இலட்சியம் இதுவென்றால் ---நீ தான்
அடைந்திட முயல வேண்டும்.
வாழ்க்கை இதுவென்று காட்டினால் --நீ தான்
அதைத் தொடரவேண்டும் .
பறந்திட பறவைகளுக்கு
சிறகுகள் உண்டு
பாய்ந்திட புலிகளுக்கு
கால்கள் உண்டு
வாழ்க்கை என்றால்
போராட்டங்களே உண்டு
விண்ணைச் சாடிடவும்
மண்ணை வென்றிடவும்
உறுதியான உள்ளம் உனக்குண்டு !
புற நானூற்றுப் புரவிகளென
புறப்பட்டு ஓடு !
-----கவின் சாரலன்.
கவிக் குறிப்பு :யாப்பெழில் கவிஞர் காளியப்பன்
எசேக்கியலின் புதிய சமுதாயம் கவிதைக்
கருத்தினில் தோன்றிய வரிகள் சற்று விரிவாக
உங்களுக்காக இங்கே ....