மாரிக்கால கச்சேரி

சொட்டும் மழைத்துளி
தட்டும் தாளம் ....!!

சுழலும் தென்றல்
சுருதி கூட்டும் ....!!

குரலுயர்த்திப் பாடும்
குளத்துத் தவளை ...!!

மார்கழி இசைவிழாவல்ல
மாரிக்கால கச்சேரி ...!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Mar-14, 6:38 pm)
பார்வை : 145

மேலே