விண்மீன்கள் -பகுதி 1

விண்மீன்கள்
வான மைதானத்தில் கண்ணுக்குள்
அடங்கா தோட்டம்
கொடியாய் பின்னிப் பிணைந்த இருளில்
மலர்ந்த எண்ணமுடியா
வண்ண ஒளிப் பூக்கள்

வானத்துக் காதலன்
நிலவுக்கு அளித்த பரிசாய் எங்கும்
சிதறிய வைரமணிக் கற்கள்

வாயேன் வந்துபிடியேன் என்று
பின்தொடர்ந்து போனால்
எங்கோ நின்று
இன்னும் கொஞ்சம் ...
இன்னும் கொஞ்சம் என்று
கண்ணாமூச்சு காட்டும் குழந்தைகள்

வானமெனும் தேவனின் கருணையால்
இரவில் மட்டுமே உலா வர
சாபம் பெற்ற அகலிகைகள்
இராமன்களைத் தான் காணவில்லை !

எழுதியவர் : நேத்ரா (31-Mar-14, 8:39 pm)
பார்வை : 102

மேலே