கடல் கரிக்கிறது கண்ணீரால்

கர்ப்பூரமாய் காற்றினில் கலந்தாயோ
வெப்பத்தில் வெடித்து சிதைந்தாயோ
வெல்லமென நீரினில் கரைந்தாயோ
பனிபோழுருகி கடலில் சேர்ந்தாயோ
யாதும் அறியாது ஒன்றும் விளங்காது
எங்கே சென்றாய் எப்படி சென்றாய்
நீ சுமந்து பறந்து சென்ற உயிர்களின்
உறவுகள் ஒப்பாரி கேட்கவில்லையா
இல்லையெனில் இன்றோடு முடியும்
இருப்பதும் இல்லாததும் அறியாமலே
நித்தமுமிங்கு கண்ணீரில் மழைகள்
ஊழல் அரசியலை பின்னுக்குத்தள்ளி
நித்தமும் ஒன்றென புதிய செய்தியாய்
அரசியல் காழ்புணர்வென்று சொல்லி
கள்ள கடவுசீட்டென்று பெயர்சொல்லி
விமானியின் பித்தென்று திசைமாற்றி
காட்டுக்குள்கிடப்பதாய் கதைசொல்லி
இறுதியாய் இந்துமாசமுத்திரத்திலே நீ
இங்கொன்றும் அன்கொன்றும் இருபதாய்
தேடியுன் இன்னுமுனை காணவில்லை
புரியாத புதிராய் தெரியாத விடையாய்
காணாதுபோனது மட்டும் உண்மையிங்கு,
இறைவா இருக்குமிடமத்தை காட்டிவிடு
இல்லையேல் இறந்துடலேனும் தந்துவிடு

உன்னிடமே கையேந்தி கண்ணீரோடு,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (1-Apr-14, 4:03 pm)
பார்வை : 61

மேலே