+பிடித்திருந்தால் இன்றே நீ சரியென கூறிடு+

திரும்பவும் உனை பார்த்ததில் மகிழ்ச்சி கொண்டேன்
திரும்பி நீ முறைத்ததில் தயக்கம் கொண்டேன்
விரும்பிடும் மனதிடம் நான் என்ன சொல்வேன்
அரும்பிடும் ஆசையை நான் எங்கு கொல்வேன்

கடந்திடும் மணித்துளி போல் உந்தன் நினைவு
தொடர்ந்திடும் பொழு தனைத்தும் நல்ல கனவு
கடத்திடும் நேரமெல்லாம் நான் உன்னை மறந்து
கடித்திடும் வலி கொடுக்கும் மனதுனுள் எரும்பு

வழித்தடம் அனைத்தும் தெரிவது உந்தன் நிழலோ
வழிபாட்டு தளத்தில் ஒலிப்பதும் உந்தன் குரலோ
வெளிப்படுத்த காதலை இன்றே நாளும் குறித்தேன்
வெளிச்சமாய் வருவாயோ நீயென அறியத் தவித்தேன்

பிடித்திருந்தால் இன்றே நீ சரியென கூறிடு
பிடிக்காவிட்டால் இன்னும் சில நாட்களை கடத்திடு
பிடித்துவிட்டது உனக்கு என்ற நினைவினில் நானே
பிடித்தே வாழ்க்கையை அழகாய் கடத்திடு வேனே

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Apr-14, 6:04 am)
பார்வை : 135

மேலே