வைரமுத்து ரசிகனின் வாழ்த்து

வைகறை மேகங்கள் காத்திருக்க...
சிகரங்களை நோக்கி எழுந்து...
தமிழுக்கு நிறமுண்டு என்று
முழங்கிய கவிபேரரசு...
தேனி கள்ளிக்காட்டில் பிறந்தது
இந்த கருவாச்சி காவியம்...
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
என்று செல்லி தன்னுடைய
புத்தஙகளை விற்ற தமிழ் வித்தகன்...
கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
என்று நேரங்களை கழிப்பவன்...
இதிகாசமும் காவியங்களும்
இவனின் கையசைவிற்கே
அடிமையாகும்...
இவன் எழுதிய பாடலெல்லாம்
காற்றின் துகள்களில் என்றும்
நீங்காமல் நினைவிருக்கும்...
இவன் எழுதிய எழுத்துகளால்
மட்டுமே இவ்வுலகில்
மூன்றாம் உலகப்போர் மூண்டது...
கலைமாமணி...
சாகித்திய அகாதமி...
இன்று
பத்ம பூஷண்...
என்று தழிழுக்காக
குவித்த விருதுகள்
கணக்கில் அடங்குவதில்லை...!
இவன் பேனா முனைக்கு
ஓய்வே கிடையாதா...?
இவன் கற்பனை மை
என்றுமே தீராதா...?
காவிய வார்த்தைகளை
எங்கிருந்து தான்
பதிவேற்றுகிறானோ...?
அப்பப்பா...
இவன் வீட்டில்
எத்துனை அலமாரியோ...?
இவன் படைப்புகளை
சேகரிக்க தனி நூலகம்
தேவைப்படுமோ...?
சோல்லி மாளாது...
இவன் தமிழ்புகழ் கொண்டவன்...
இவன் தமிழ்ப் பணி
மேலும் மேலும்
சிறக்க இந்த
அடிமட்ட ரசிகனின்
வாழ்த்துக்கள்...!