இரு பொருள் கவி

தெய்வமே நீஎன்பான் பார்வையும் முகானந்தமதும்
பாதமதும் அழகாய் ரசித்தங்கே தமிழ்பேசியாகி
தமிழ்செய்வான் கவியாவன் கவிஞனும் சிஷ்யனும்
இருவரையும் இறைநிலை தக்கசமயத்தில் காத்திடுதே.
****************************************************************************
1.பொருள் -கவிஞன்
கவிஞன் பெண் ஒருவளை கவியில் தெய்வமே நீ என்பான்.அவளின் பார்வையும் முகத்தை பார்ப்பதால் பெறும் ஆனந்தத்தையும் அவள் பாத அழகையும் ரசித்து பின் கவி செய்ய தமிழ் பேசியாகி தமிழ் செய்வான்.அவனை தக்க சமயத்தில் எவ்வாறு காக்க வேண்டுமோ அவ்வாறு இறைவன் காப்பான்.
****************************************************************************
2.பொருள் - சிஷ்யன்
சிஷ்யன் தன் குருவை நோக்கி தெய்வமே நீ என்பான் அவருடைய பார்வை அவர் முகம் தரும் ஆனந்தம் அவர் பாதம் ரசித்து தமிழ் பேசியாகி தமிழ் செய்வான் கவி ஆவான்....அவனையும் தக்க சமயத்தில் எவ்வாறு காக்க வேண்டுமோ அவ்வாறு இறைவன் காக்கிறானே ..

எழுதியவர் : குருவருள்கவி (2-Apr-14, 1:32 pm)
பார்வை : 1010

மேலே