இரு பொருள் கவி

பதுங்கிஇருந்து செய்வதை செய்தல் தகுஉயிர்
கண்டதுமே கண்ணால் கவனித்து நோக்கல்
தக்கசமயத்தில் வாயாலே சத்தமது எழுப்பி
தானுற்றபசி ஆற்றுவாறே குருவும் புலியும்
***************************************************************************
1.புலி
பதுங்கி இருத்தல் தக்க உயிர் கண்டதும் கவனித்து நோக்கல் பின் தக்க சமயத்தில் வாயால் சத்தம் செய்து புலி தன் பசி போக்கும்.
***************************************************************************
2.குரு
யாரும் அறியாது (பதுங்கி இருப்பது) போல் இருந்து செய்வதை செய்தல் உ.ம் இறைவனை நல்ல சிஷ்யன் வேண்டி வேண்டல்
தகு உயிர் கண் பட்டதும் வாயால் உப தேசம் செய்து நல்ல சிஷ்யனை அடைய வேண்டும் என்ற தன் பசியை ஆற்றி கொள்ளுதல் ..............
நல்ல ஆன்மிக குருவின் செய்கை
****************************************************************************