இரு சூரியன்கள் சந்தித்துக்கொண்டால் 1-வித்யா
![](https://eluthu.com/images/loading.gif)
இரு சூரியன்கள்
சந்தித்துக்கொள்ளும் போது
இரு வேறு பிரபஞ்சங்கள்
சங்கமித்துக்கொள்ளும்.......!-வித்யா.
மோகத்திரை போர்த்தி
சூரியனோடு போர்தொடுத்த
மேகங்களெல்லாம் வாகை சூடிய
ஓர் அஸ்த்தமன வேளையிலே
வான வெளியில் சிறகு விரித்து
உயர உயர பறக்கிறான்.......!(கழுகு கதை நாயகன்)
மெல்லுடலைத் திருப்பி
கொஞ்சம் கீழே பார்க்கையிலே
கடற்மேற்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக
நிறம் மாறி......ஆதவனை
அந்தப்புரத்திற்குள் அழைத்து
சென்றதொரு திருக்காட்சி............!
படுக்கையறை துயில் கலைந்து
நிலவு எழும் நாழிகையிலே
காற்று வெளியேறிய பலூனென
தரையிறங்கினான் கடற்கரையிலே.......!
ஆழிப்பேரலை கண்டெழும்
நினைவலையது......
விடா முயற்சியென
தளரா நம்பிக்கையுடன்
பாதம் தழுவ........
அவள் நினைவுகளில்
சுயநினைவிழந்து தண்ணீரின்
கண்ணீரில் மூழ்கும் போது
லாவகமாக எகிறி குதித்து
அலையொதுக்கி கவலையில்
உறைகிறான்............!
-தொடரும்....
****************************************************************************
தற்போதைய வாழ்க்கை சூழலில்
இரு வேறு பிரபஞ்சங்களின்
இரு சூரியன்களின் சங்கமம்.....!
என் கற்பனை கலந்த
ஒரு எளிய கதை.....
தொடர் கவி வடிவில்
ஒரு புதிய முயற்சி.......