ரங்கநாதன் கவிதைகள் - முல்லைச்சரம்
ஆண் :
கொல்லையிலே தென்ன மரம்
கொள கொளயாய் தொங்குதடி
கோவை வாய் கிளிங்க ரெண்டு
கூடி அங்கு கொஞ்சுதடி
கொளத்தோரம் ஆலமரம்
கோவிலுக்கு சொந்த மரம்
கூவாத குயிலு ரெண்டு
கூவி அங்கு குலவுதடி
கொத்தோடு பழுத்த கொய்யா
கொம்புலே ஆடுதடி
குட்டி குட்டி அணிலு ரெண்டு - அங்கு
கும்மாளம் போடுதடி
ஊரோரம் ஊஞ்ச வனம்
ஊத்தெடுக்கும் ஆறு குளம்
உறவாட தெரியலன்னு - என்ன
தூத்துதடி ஊருசனம்
மொட்டு மொட்டு முல்லைசரம்
கொண்டு வந்தேன் ரெண்டு மொழம்
பொட்டு வைக்க பூ முடிக்க
கிட்டுளியே சாமி வரம்
பெண் :
பூ பூத்த காட்டுக்குள்ளே
புள்ளி மான் ஓடுதையா
பூட்டி வச்ச வீட்டுக்குள்ளே - பொண்ணு
புரியாம வாடுதயா
கண்ணு பட்டு கண்ணு பட்டு
கண்ணுறக்கம் கெட்டுதயா
நான் மொட்டு மொட்டு முல்லைச் செடி
என் முன்னும் பின்னும் முள்ளுச் செடி
கவிஞர். நரியனுர் ரங்கு
செல் : 9442090468