சூரியன் பெற்ற சுழல் பூமி

'' சூரியன் பெற்ற சுழல் பூமி ''

'' அறம் - பொருள் ,இன்பம் ,என தமிழ் மறை ,
வள்ளுவனின் காலம் தாண்டி ,
ஒளிர்விட்டு கொண்டிருப்பவன் ,
இந்த சூரியன் //

'' ஆதி - முதல் அண்டம் வரை வெளிச்சத்தை ,
கொடுக்கக்கூடிய ஒளி சக்தி உடையவன் ,
இந்த சூரியன் //

'' இயற்கையாகவே - தன்னை எரித்துக்கொண்டு ,
உலகுக்கே வட்ட வடிவில் மிடுக்காய் ஒளிர்பவன் ,
இந்த சூரியன் //

'' ஈரமென்னும் - தண்ணீரை தான் இழுத்து கரு மேகத்தில் ,
தன் முகத்தை தான் மறைத்து பூமிதனில் ,
மழையாய் பெய்யச்செயும்,
இந்த சூரியன் //

'' உலகம் - என்னும் பூமியையே என்னை சுற்றிவர ,
தன்னைத்தானே சுற்றுவதற்கு ,
சக்தி கொடுத்தவன் ,
இந்த சூரியன் //

'' ஊமையுமாய் - பூமியினை சுட்டெரித்தது போதும் ,
என அடுத்து வரும் சந்திரனை ,
உடன் அனுப்பி குளிர வைப்பவன் ,
இந்த சூரியன் //

'' எங்களுடையது - என்று கூறினால் உதடுகள் கூட ஒட்டாது ,
நம்முடையது என கூறினால் உதடுகளும் ,
ஒட்டுமென சொல்லுக்கு (ச்)சொந்தக்காரன் ,
இந்த சூரியன் //

'' ஏர் - உழவருக்கும் ஏற்றப்பஞ்சம் ஏற்ப்படாமல் ,
ஏதுவாக உளர் சக்தி கொடுப்பவன் ,
இந்த சூரியன் //

'' ஐந்து - பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கி ,
தான் நின்று மற்றனைத்தையும் ,
சுழலவைக்க கூடியவன் ,
இந்த சூரியன் //

'' ஒட்டுமொத்த - உலகையே தன் வெள்ளி தட்டில் ,
வைத்திருக்கும் ஒரு வைரக்கல் தான் ,
இந்த சூரியன் // - ஆக மொத்தத்தில் ,

'' ஓம் ஹார - சொல்லுக்கும் ஏழு நிற வானவில் ,
வர்ணத்திற்கும் கானல் நீராய் ஒளிர்பவன் ,
இந்த சூரியன் //

'' என்றும் சூரிய வெளிச்சத்துடன் உங்கள் சிவகவி ,,,,

எழுதியவர் : சிவகவி (2-Apr-14, 8:10 pm)
பார்வை : 143

மேலே