கண்ணீர் விட்டு பிரிந்தாலும் இதயத்தில் வாழும் காதல்

பாதியில் நிறுத்திய ஓவியமும் முழுமையானது
நம் கரம் சேர்ந்து உருவானதால்
துயரமான நாட்களும் அழகானது
உன்னை என் அருகில் உணர்ந்ததால்

உன் தோல் சாய்ந்து அமர்ந்த அரை நிமிடம்
இந்த உலகம் முழுவதும் நமக்கு மட்டுமே சொந்தமாய்
என்றும் உன்னுடன் வாழ ஆசை
ஏனோ கடவுளிடம் கேட்க கூட அதிர்ஷ்டம் இல்லை

உன்னுடன் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
உள்ளத்தால் முழுமையாய் வாழ்ந்து விட்டேன்
இது போதும் என்று சொல்ல மனம் இல்லை
அனால் எதையும் சிரிப்புடன் ஏற்று கொள்வேன்
தருவது நீயாக இருந்தால்

என் வாழ்நாள் முழுவதும் உனக்கு பிடித்த விஷயங்கள்
ஏதாவது ஒரு விதத்தில் என்னுடன் இருந்து கொண்டே தான் இருக்கும்
இதுவரை உனக்காக எழுதிய கவிதைகள் அனைத்தும் மகிழ்ச்சியால் மட்டுமே உருவானவை

மனமும் கண்ணும் சேர்ந்து கலங்கிய இந்த தருணம் உதிர்ந்த இந்த வார்த்தைகள்
உன்னை போல் என்றுமே எனக்கு தனித்தன்மை வாய்ந்தது,,,

எழுதியவர் : Ranith (3-Apr-14, 4:01 pm)
பார்வை : 132

மேலே