நாய் கடிக்கும் எலும்பு

காய்ந்து கிடக்கும்
நாயொன்று
எலும்பு துண்டை கண்டு
கடித்து குதறியது
குருதியது வழிந்தோட
சுவைத்து நக்கியது
தன் குருதி என்றறியாமல்
இந்திய மக்களும்
ஆறாம் அறிவு தொலைத்து
மாக்களாகி
தேர்தல் நடைமுறையில்
எலும்பு துண்டாய் வீசப்படும்
ஐநூறு ஆயிரத்திற்கு
ஆசைப்பட்டு
குருதியாய் வழிவது
நம்மிடம் சுரண்டிய
நம் பணம் என்றே
உணராதது
ஜனநாயக சாபம்...

எழுதியவர் : சித்ரா ராஜ் (3-Apr-14, 6:10 pm)
Tanglish : nay kadikkum elumbu
பார்வை : 357

மேலே