இனிக்கும் வார்த்தைகள் நிலைக்கும்

நாசரிக்கும் ஆத்திரத்தில்
மூச்சமிழ்க்கும் வார்த்தைகள்
நாசத்தை ஏற்படுத்தி
நேசத்தை சீர்குலைக்கும் !
நா சத்தம் இழந்து விட்டால்
நம் சட்டம் ஜெயித்துவிடும்!
நாம் சத்தம் இழந்துவிட்டால்
நாடெல்லாம் நாறிவிடும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சோலைக் கரும்புகள்
ஆலையில் ஆட்டப்பட்டால்
எச்சூறும் வாய் போல
வார்த்தைக் கரும்புகள்
ஆட்டப்படும் ஆலை கூட
மயலாகிப் போயிருக்கும்!
புயலாக சுழன்றிருக்கும்!
மொழிச் சுவையின் உச்சம் கண்டு
ஆலை கூட அதிர்ந்தே மறத்திருக்கும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சீரிய வார்த்தைகளின்
காலடில்கள் கற்றுத்தரும்
ஆயிரங்கோடி அற்புதங்ளை
ஆணிவேர்த் தங்கங்களை
அள்ளித் தருமா?
அநாவசிய வார்த்தைகளும் !!!
அநாமேதய நடத்தைகளும் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நக்குண்ட வார்த்தைகளுக்கு
நாமடிமை நீக்கி
விக்குண்டே நாசகார வார்த்தைகளை
வெளியே கக்கிவிட்டு
நாவடிமை நீக்கியே
நா வலிமை சேர்ப்போம்!!!
மூளையின் முணுகலை அகற்றிவிட்டு
இருதயத்தின் இனிமையை சுவைப்போம்!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இருதயத்தின் இருள்தாயத்தை நீக்கி
இரும்பிலும் வலிய
நற்றமிழ் வார்த்தைகள் வளர
வலியகற்றி வழிசமைப்போம்!!!
புன்னகையோடு புகழ் வளர்ப்போம்!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~