காதல்
நினைவில் தோன்றி என் நிம்மதியை
நிலைகுலைக்கும் பெண்ணே
மனதிலே
நீ விட்டு சென்ற தடங்கல்
முள்ளாய் என்னை வாட்டுதடி
பித்தனாய் சுற்றி திரிகிறேன்
கண் பார்க்கும் இடம் எல்லாம்
நிழலாய் என்னையே சுற்றுகிறாயே
ஏனோ என்னை விட்டு பிரிந்தாயே
என் அழுகையின் குரல்
உன் இதயத்தில் ஒலிக்கவில்லையா
என் கண்ணீரின் ஈரம்
உன்னை நனைக்கவில்லையா
உன் அன்பான வார்த்தைகளை கேட்ட பின்னே
உறங்கும் இந்த விழிகள்
இன்று நீ இல்லாமல்
விழிகளில் உன்னை எதிர்பாத்து காத்துக்கிடகிறதே..
உலகமே இன்று எனக்கு புதிராக தெரியுதடி
நீ என்னை நோக்கி வருவாய் என
என் மனவாசல் திறந்து காதுக்கிடக்குதடி !!!!