பருவங்கள் ஏழு

வாழ்க்கை
வானவில்
வர்ணங்கள் ஏழு
பருவங்கள் ஏழு
மறைந்தாலும்
வானவில்
கலைந்தாலும்
வர்ணங்கள்
காற்றோடு
கலந்திருக்கும்
வாழ்ந்தவர்
நினைவுகள்
மட்டும்



பச்சை அது
குழந்தைப் பருவம்
இச்சைத் துறந்த
இனிமைப் பருவம்
கச்சைக் கட்டி
தவழும் பொழுதும்
லஜ்ஜை அறியா
பசுமைப் பருவம்


மஞ்சள் அது
பள்ளிப் பருவம்
அறிவைத் தீட்டும்
மகிழ்ச்சிப் பருவம்
கடமை அறியா
கன்னிப் பருவம்
நட்பின் நாவில்
கரையும் பருவம்


ஊதா அது
இளமைப் பருவம்
உடல்
கூடல் தேடும்
ஊடல் பருவம்
உழைப்பின் நடுவே
களைப்பை நீக்கும்
காதல் வந்து
வாய்க்கும் பருவம்



நீலம் அது
திருமணப் பருவம்
இரு மனம் கூடும்
இறைவனின் உருவம்
வம்ச விதைகள்
விளையும் பருவம்
வசந்தம்
வாசல்
நனைக்கும் பருவம்



கரு நீலம் அது
கடமைப் பருவம்
வயதின் குறும்புகள்
உறங்கும் பருவம்
குடும்பம் காக்க
குரைக்கும் பருவம்
உடல்
உழைப்பில்
ஊறி
உருகும் பருவம்



சிவப்பு அது
முதுமைப்பருவம்
ஓய்வைத் தேடி
ஒதுங்கும் பருவம்
மறுமை வாழ்வின்
மறுமொழித் தேடி
ஆன்மீகமாய்
அலையும் பருவம்
நாடி நரம்புகள்
அடங்கும் பருவம்
முடிவை உணர்த்தும்
சமிஞ்சைப் பருவம்



செம்மஞ்சள் அது
கடைப் பருவம்
நோயின் பிடியில்
முடங்கும் பருவம்
தாயின் மடியில்
தளைத்த உயிரை
பாயின் மடி
குடிக்கும் பருவம்
காலன் வருகையை
நாளும் எதிர்பார்த்து
வானம் பார்த்து
ஏங்கும் பருவம்

எழுதியவர் : கீதமன் (4-Apr-14, 5:06 pm)
Tanglish : paruvangal ezhu
பார்வை : 126

மேலே