என் காதல் கதை பகுதி 19
![](https://eluthu.com/images/loading.gif)
மறதி என்ற குணங்கள் மட்டும்
மனிதனுக்கு மறுத்து போனால்
மனிதன் என்ற மா வரத்தை
பூமியில் தேட வேண்டும் ....
முதல் காதல் தோற்கும் போதும்
மறக்கும் மனது இயல்பாய் வேணும்
இறந்து போக துணியும் மனதை
மறதி கொண்டு மறக்க வேணும்
பிறப்பிற்கு காரணம் உண்டு
முதல் தோல்வி அல்ல முற்று புள்ளி
என்ற எண்ணம் நமக்கு வேண்டும்
காதல் மட்டும் வாழ்க்கை அல்ல
என்றே நமக்கு என்ன தோணும்
வாழ்க்கை என்பது இரண்டு உண்டு
நாம் விரும்பும் வாழ்க்கை ஒன்று
நம்மை விரும்பும் வாழ்க்கை ஒன்று
காதல் மட்டும் வாழ்க்கை இல்லை
அதையும் தாண்டி வாழ்ந்து நில்லு
என்று நண்பன் சொன்ன சொல்லை கேட்டு
முதல் காதல் தோற்றபோது
தேற்றும் வார்த்தை வாழ்க்கை என்று
நானும் வாழ தொடங்கும் போது....
இன்னும் தொடரும் என் காதல் கதை ....