எங்கே போகிறாய் இளைஞனே - எழுந்து வா என்னுடனே --- இராஜ்குமார் ---
உன்னை அறிய நீ மறந்து
திரையை தேடி திரியாதே ..!
அன்பை கொஞ்சம் நீ கொடுத்து
அழியும் முன்னே வளர்த்து விடு ..!!
எங்கே போகிறாய் இளைஞனே
எழுந்து வா என்னுடனே ..!
ஒற்றை ஒளி பின் வந்தால் - உன்
நிழலும் கூட உன் முன்னே ..!
நிழலை போல நீ தொடர்ந்து
இரவில் மட்டும் நீ தூங்கு ..!!
உன் இமையும் இங்கே விழியாகி
விந்தை உலகை உற்று பார் ..!
காதல் காந்தம் நீ என்றால்
புவி காந்தமதில் புதுமை கொடு ..!!
உறங்கி உறங்கி அழிகிறாய்
வளர்ச்சி அதனை மறக்கிறாய் ..!
உற்று பார் - இங்கே
ஊழல் கூட வளர்ச்சியில் ..!!
உரிமை விற்று
ஊழல் வளர்த்தாய் ..!
கடமை கேட்டு
கண்ணீர் வடிக்கிறாய் ..!!
எதிர்த்து நில் மனிதா - உன்
வளர்ச்சி வான் வரைக்கும் ..!
நிமிர்ந்து நில் மனிதா - உன்
பாதம் தொட்டு புவி வணங்கும் ..!!
உடைந்த கல்லா நீ - இல்லை
உற்று பார் ,
வைரம் என பேர் வைத்து
வாங்கி செல்ல பல பேர்
வரிசையில் ..!!
கண்முன் இருக்கும் இலக்கை
உடனே தொட்டு எடுத்து விடு ..!
தொலைவில் தெரியும் அவ்விலக்கை
துரத்தி நீயும் கொன்று விடு ..!!
புதிதாய் தொடங்கும் இப்பாதை வழியில்
பற்றி எரியும் நம் பாதம் - பின்
சாம்பல் கூட வழி சொல்லும்
நண்பர்கள் நாமே சுவடுகளாய் ..!!
வறுமை அழித்து
கல்வி அளித்து
ஊழல் ஒழித்து
மனிதம் வளர்த்து
புதுமை படைக்கும் நம் பயணம் ..!!
எங்கே போகிறாய் இளைஞனே
எழுந்து வா என்னுடனே ..!
--- இராஜ்குமார்
----------------------------------------------------------------------------
தன்னம்பிக்கை கவிதை - 2 .
தொடரும் தன்னபிக்கை பயணம்
----------------------------------------------------------------------------