வேலையில்லா பட்டதாரி

நான்கு வருடங்கள் நான்கு நொடிபோல்
முடிந்து விட்டது ........
நான் கொண்ட கடமைகள் நடக்காமலே ......
கடைசி வரையில் நான் கடிந்துகொண்டே
கல்லூரி வாழ்வை கழித்தேன் .......கையில்
ஒரு வேலை கூட இல்லாமல் ..........
இந்த வேள்வியில் இருந்து நான்
வெளியேறிவிட்டேன் ......
வெற்றுமனிதனாய் ......வெற்றியடையதவனாய்
வெளியுலகில் தலைகாட்ட முடியாமல்
தன்வயிற்றை கூட தானே நிரப்ப
தகுதிஇல்லாமல் வெறுமனே
வேலையில்லா பட்டதாரி ஆனேன் ......................

எழுதியவர் : குயில் (5-Apr-14, 9:12 am)
பார்வை : 122

மேலே