என் காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
நட்சத்திரங்களோடு
கைகோர்த்து
முப்பத்து முக்கோடி
தேவர்கள் மற்றும் தேவதைகள்
சுகந்தம் பாட....
நகரும் நிமிடங்களோடு
கைகோர்த்து
பூக்களும் தோரணங்களும்
கவிதை பாட..
இதழ் நிறைய புன்னகை
சிந்தும் உறவுகளும்..
மனம் நிறைய வாழ்த்துகள்
சொல்லும் உள்ளங்களும்
நிறைந்திருக்க..
உன் கரம் பிடிக்கும்
அந்நாள்..
இனி வரப்போவதில்லை
எனத் தெரிந்தும்..
கனவில் தினமும்
நினைத்து தொலைக்கிறது.
என் காதல்........