மரபு மாமணி அய்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து

புதுக்கவிதை எனும்
பிஞ்சு கைகளால்
மரபுக்கவிதை எனும்
பெருங்கால்களை
தொட்டு வணங்குகிறேன்.
தமிழ் பெருங்கடலில்
சின்னஞ்சிறு படகுகள்
கவிதை துடுப்பில்
சிரமத்துடன் பயணத்திருக்க,
தமிழ் என்னும் அழகிய
அமுதகான ஒலியெழுப்பி
இலக்கிய திறனோடு
கம்பீரத்தோடு வலம் வரும்
மாபெரும் கப்பலாம்
மரபுகவிதையின் மன்னராம்
மதிப்பிற்குரிய ஐயா..!
உங்களின் கைப்பிடித்து
பயணிக்கிறோம் ஆனந்தமாக...!
தமிழ் வானம்
இந்த எழுத்து தளம்...!
இரவு என்று
நாங்கள் எழுதினால்
நிலவு போன்ற
நீங்கள் எங்களை
ஆசிர்வாதம் செய்யுங்கள்.
பகல் என்று
நாங்கள் எழுதினால்
பகலவன் போன்ற
நீங்கள் எங்களை
ஆசிர்வாதம் செய்யுங்கள்.
மைதீரா அற்புத
எழுதுகோல் உங்களிடம்..!
ரசனை ஏற்கும்
தாள்கள் நாங்கள்..!
வண்ண வண்ண
வானவில் படைப்புக்கள்
மின்னும் ஜொலிக்கும்
நட்சத்திர இலக்கியங்கள்
இன்னும் இன்னும்
தாருங்கள் ஐயா..!
இன்று பிறந்தநாள்
கொண்டாடும்
மரபு மாமணி
காளியப்பன் எசேக்கியல் ஐயாவுக்கு
”எழுத்து.காம்”
தோழமைகளின் சார்பாக
உற்சாக உள்ளத்தோடு
வாழ்த்து சொல்லி
சிரம்தாழ்ந்து வணங்குகிறேன்.
எழுத்து தள குழந்தைகளின்
”இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” ஐயா..!