+எழுவாய் பயனிலை செயப்படுபொருள்+

சூரியன் பிரகாசமாய் எழுந்தான்
சந்திரன் வெட்கத்தில் ஒளிந்தான்
நீயும் சூரியனாய் எழுவாய்
சோம்பிக்கிடந்தால் பயனிலை
செயல்படுவாயே நல்மனிதனாக...
நீயொரு சந்திரனாய் ஒளிர்வாய்
துஷ்டன் கண்டு ஒளியாமல்
துரத்திவிடுவாயே வெகுதூரம்...
மேகம் கண்ணீரை பொழிந்தான்
மின்னல் வானம்விட்டு விழுந்தான்
மேக வண்ணமாய் மனதை வைப்போம்
தீமை மனதில் கருமையாய் பரவ
தூய்மையாக்குவோம் துணிந்தே விரைவாய்...
இடியென துன்பம் எதுவந்தாலும்
மன திடம் கொண்டே எதிர்த்து நின்றால்
துன்பம் விழுந்திடும் தூரப் பறந்திடும்...
வானவில் வண்ணம்தீட்டி மறைந்தான்
புயல் பயமுறுத்தி கடந்தான்
வண்ணமாய் வாழ்வைத் தீட்டிடுவோம்
கேளி செய்வோரை ஓட்டிடுவோம்
எண்ணங்கள் உயர்வாய் கொண்டிடுவோம்
கஷ்டம் புயல்போல வந்திட பயம்வேண்டாம்
பனிபோல் விலகிடும் துயர்வேண்டாம்
அதுவும் கடக்கும் எதுவும் கடக்கும் அன்பால் வாழ்விலே சிறப்போமே!