சந்தேகம் எனும் ஜ்வாலை

நான் உன்னவள் தான் ..
உணர்ச்சிகளும் உள்ளவள் தான்
எங்கு சென்றாலும்
எனை பின் தொடர்கின்றாயே ?
கனிணியில் உன் கடவுச்சொல்
அலைபேசியில் உன் கடுஞ்சொல்
நான் வேண்டும்
என் பணம் வேண்டும்
எனை பின் தொடரவும் வேண்டுமா ???
சாதனைகளை ரசிக்க விடாமல்
சந்தேகத்தால் எனை தீயிலிட்டு
சந்தோஷ படுகின்றாயே ?
பணியில் பணியின் தாக்கம்
பணியிலிருந்து வீடு திரும்பினால்
உன் சந்தேகத்தின் தாக்கம் ..
ஆரம்பத்திற்கு
முடிவு என்பது ஒன்று உண்டு
முடிவே இல்லாத ஆரம்பம் இது தானோ ?
மனம் புண்ணாகி
புண் புரையோடி
காய்த்தும் விட்டது
அறுவை சிகிச்சை செய்தாலும் இனி வலிக்காது
நான் உன்னை பார்க்கும் நேரம் குறைவு
நீ எனை தொடரும் நேரத்தை விட
சந்தேகம் எனும் சந்தோஷமற்ற இல்லறம்
10 ஆண்டுகள் ஓடி விட்டன
ஓடாமல் நானும் ஓடி கொண்டு இருக்கின்றேன் உன்னோடு உணர்வுகளை விழுங்கி ..
பெண் பொம்மையல்ல
பொம்மலாட்டம் ஆடுவதற்கு
நம்பிக்கை என் மேல் இல்லையா ?(அ)
உன் மேல் இல்லையா ?
சிந்தித்து பார் .
பெண்ணின் மறுபக்கம்
தீயாய் எரியும்
சந்தேக தீயாய் அல்ல
சவாலான தீ ...
சரித்திரம் படைக்கும் தீ ...
சந்தேகம் எனும் ஜ்வாலையை அணைத்து
மனைவி எனும் மதிப்புள்ள
சொத்தை அனுபவியுங்கள் ....